/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேசிய விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா: முதல்வர் பரிசளிப்பு தேசிய விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா: முதல்வர் பரிசளிப்பு
தேசிய விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா: முதல்வர் பரிசளிப்பு
தேசிய விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா: முதல்வர் பரிசளிப்பு
தேசிய விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு விழா: முதல்வர் பரிசளிப்பு
ADDED : ஜூலை 03, 2025 08:14 AM

பாகூர் : புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில், தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா நடந்தது.
புதுச்சேரி நலப்பணிச் சங்க தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ் வரவேற்றார். ஆலோசகர் ஐயனார் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் பரிதா, மகளிர் பொறுப்பாளர் விஜயலட்சுமி நோக்கவுரையாற்றினர்.
மண்டல அமைப்பாளர்கள் சந்துரு ஆனந்தன் ரவி, ஆசிரியர் தனராஜா ஜாகிர் உசேன், சுரங்கத்துறை பொறியாளர் செல்வராஜ், காவலர் கணபதி, கமலக்கண்ணன், முனியன் வாழ்த்தி பேசினர்.
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற சிலம்பம் மற்றும் ஹாக்கி வீரர்களுக்கு முதல்வர் ரங்கசாமி பரிசு வழங்கி பாராட்டினார்.
பாகூர் கரிகாலச் சோழன் சிலம்பாட்டக் குழு பயிற்சியாளர் அன்புநிலவன் நன்றி கூறினார்.