/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உழவர்கரை நகராட்சியில் யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு உழவர்கரை நகராட்சியில் யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு
உழவர்கரை நகராட்சியில் யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு
உழவர்கரை நகராட்சியில் யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு
உழவர்கரை நகராட்சியில் யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு
ADDED : மார் 20, 2025 04:42 AM
புதுச்சேரி: உழவர்கரை நகராட்சி சார்பில், திறந்தவெளியில் யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சி, வெங்கட்டா நகர் பூங்காவில், சமூக பங்களிப்பு நிதியின் மூலம் பொதுமக்களின் ஆரோக்கியத்திற்காக, திறந்தவெளி ஜிம் மற்றும் யோகா மேடை கட்டமைப்புடன், கடந்த ஜூலை மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜிம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சனிக்கிழமைகளில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதனை மேலும் விரிவுப்படுத்த கூடுதலாக, ஞாயிற்று கிழமையில், காலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.