தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி

வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி

வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி


ADDED : ஜூன் 15, 2025 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2025 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கரையாம்புத்துார் அருகே வாலிபரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, கரையாம்புத்துார் பாகூர் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் மதன், 24, பெயிண்டர். இவர் நேற்று இரவு 12.35 மணியளவில் அதே பகுதியில் உள்ள தனியார் பாரில் மது குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சிலர், மதனை அழைத்துள்ளனர். அங்கிருந்து தப்பியோட முயன்ற மதனை அந்த கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது. பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார்.

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற கரையாம்புத்துார் போலீசார், மதனை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த இடம் தமிழகம் - புதுச்சேரி எல்லைப்பகுதி என்பதால் கரையாம்புத்துார் போலீசார் மற்றும் வளவனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us