ADDED : அக் 10, 2025 03:37 AM

புதுச்சேரி: புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் முத்தியால்பேட் ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் சார்பில், ராஜ்பவன் தொகுதியில் கர்ப்பிணிகளுக்கான வளைகாப்பு விழா நேற்று நடந்தது.
வாழைகுளம் செங்கேணி அம்மன் கோவிலில் நடந்த விழாவில், அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டு, கர்ப்பிணிகளை வாழ்த்தி, சொந்த செலவில் சிறப்புப் பரிசுகள் வழங்கினார்.
இதில், பங்கேற்ற 300க்கும் மேற்பட்டவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப் பட்டது. முன்னதாக, திட்ட அதிகாரி செல்வகுமார் வரவேற்றார். ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் வாழ்த்தி பேசினர்.ஏற்பாடுகளை அங்கன்வாடி மைய ஊழியர்கள், உதவியாளர்கள் செய்திருந்தனர்.


