/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அறுவை சிகிச்சை இல்லாமல் முதுகுவலி குறையும்; தி பாஷ் மருத்துவமனையின் புதிய ஆய்வு அறுவை சிகிச்சை இல்லாமல் முதுகுவலி குறையும்; தி பாஷ் மருத்துவமனையின் புதிய ஆய்வு
அறுவை சிகிச்சை இல்லாமல் முதுகுவலி குறையும்; தி பாஷ் மருத்துவமனையின் புதிய ஆய்வு
அறுவை சிகிச்சை இல்லாமல் முதுகுவலி குறையும்; தி பாஷ் மருத்துவமனையின் புதிய ஆய்வு
அறுவை சிகிச்சை இல்லாமல் முதுகுவலி குறையும்; தி பாஷ் மருத்துவமனையின் புதிய ஆய்வு
ADDED : ஜூன் 11, 2025 07:59 AM

புதுச்சேரி; முதுகுவலி, கால்களில் பரவும் நரம்பு வலி மற்றும் நரம்பு சுருக்க பிரச்னைகளுக்கு அறுவை சிகிச்சை இன்றி குணமாக்க முடியும் என்பதை, புதுச்சேரி தி பாஷ் மருத்துவமனை மேற்கொண்ட ஆய்வில் ஆதாரம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து தி பாஷ் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் வீரப்பன் கூறியதாவது:
இன்றைய நவீன உலகில் பலரையும் பாதிக்கும் முதுகுவலி, கால்களில் பரவும் நரம்பு வலி, நரம்புச்சுருக்கம் போன்ற பிரச்னைகளுக்கு, அறுவை சிகிச்சையே தீர்வு என பலர் நம்புகின்றனர். எங்கள் மருத்துவமனையில் மேற்கொண்ட ஆய்வில், அறுவை சிகிச்சை இல்லாமலேயே வலியை குறைக்க முடியும் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
ரோபோடிக் டிகம்பிரஷன் தெரபி
இந்த நவீன சிகிச்சையை மருத்துவர்கள் ஸ்பைனல் டிகம்பிரஷன் தெரபி (எஸ்.டி.ட்டி) என்கின்றனர். இதில் ரோபோட் செயல்முறை மூலம் முதுகெலும்புகளை மெதுவாக இழுக்கும் முறையாக செயல்படுகிறது. இதன் மூலம் நரம்புகளை ஒட்டியிருக்கும் 'டிஸ்க்' மீது இருக்கும் அழுத்தம் குறைக்கப்படுகிறது. இதனால் வலி, குறைவதோடு, 'டிஸ்க்'ல் உள்ள தசைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப உதவுகிறது.
மேலும், ஏ.ஐ., தொழில் நட்பத்தை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதிகளை குறி வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், சிகிச்சையின் போது 'டிஸ்க்'கில் நார்சத்து மற்றும் ஆக்சிஜன் செல்ல வழி வகுப்பதால் ஈரப்பதம் அதிகரித்து 'டிஸ்க்' இயல்பு நிலைக்கு திரும்புகிறது.
இந்த ஆய்வில் 30 நோயாளிகள் பங்கேற்றனர். அவர்களில் 15 பேருக்கு எஸ்.டி.ட்டி சிகிச்சையும், 15 பேருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் எஸ்.டி.ட்டி சிகிச்சை பெற்றவர்கள் 2 வாரங்களில் குணமடைந்தனர். இதனால், அறுவை சிகிச்சையின்றி, வலி குறையும் என்பதை இந்த ஆய்வு நிருபித்துள்ளது.
இம்முறையில், முதுகுவலி, கால்களில் பரவும் நரம்பு வலி, 'டிஸ்க் ஸ்லிப்', நரம்பு சுருக்கங்களுக்கு மேற்கொள்ளலாம். எஸ்.டி.ட்டி., சிகிச்சை செய்வதால், அறுவை சிகிச்சையினால் ஏற்படும் வலி, ரத்தப் போக்கு, தொற்று போன்ற பக்க விளைவுகள் இல்லாத நவீன மருத்துவ நுட்பமாக உருவாகியுள்ளது.
இந்த புதிய சிகிச்சை பல நோயாளிகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. முதுகுவலிக்கு இதுவே நிரந்தர தீர்வாக அமையக்கூடிய வாய்ப்பு உள்ளது' என்றார்.