/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள் உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்
உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்
உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்
உடலுக்கு வலிமை சேர்க்கும் சமநிலை ஆசனங்கள்

பர்ஷகோண ஆசனம் (அ) பக்கவாட்டு கோண நிலை
திரிகோண நிலையின் மாறுபட்ட நிலையில் இருந்து மூச்சை உள்ளிழுத்தபடி இடது கையை முடிந்த அளவிற்கு நீட்டவும். இந்த நீட்டுதலால் ஏற்படும் உணர்வை இடுப்பில் இருந்து கை நுனிகள் வரை உணர வேண்டும். நீட்டியுள்ள கையை பார்க்கவும். 10 எண்ணும் வரை இதே நிலையில் இருக்க வேண்டும்.
வீராசனம் முதல்நிலை
சமஸ்திதி நிலையில் இருந்து மூச்சை வெளியிட்டபடி குதித்து கால்களை முடிந்த அளவிற்கு அகலமாக வைக்க வேண்டும். மூச்சை உள்ளிழுத்து வலது காலையும், தலையையும் வலது பக்கமாக திருப்பவும். மூச்சை வெளியிட்டபடி வலது முட்டியை 90 டிகிரி கோணத்திற்கு மடிக்கவும். கைகள் தோளில் இருந்து நீட்டிய நிலையில் உடல் நேராக மற்றும் மார்பு பகுதியை நன்கு விரித்த நிலையில் இருக்க வேண்டும்.
வீராசனம் இரண்டாம் நிலை
சமஸ்திதி நிலையில் இருந்து மூச்சை உள்ளிழுத்தபடி குதித்து கால்களை முடிந்த அளவிற்கு அகலப்படுத்தவும். தோளுக்கு நேராக கைகளை நீட்ட வேண்டும். மூச்சை அடக்கி, வலது கால் மற்றும் தலையை வலப்பக்கம் திருப்பி முட்டியை 90 டிகிரி கோணத்தில் மடிக்கவும். மூச்சை வெளியே அடக்கி உடலை திருப்பி கைகளை விரிக்கவும். மூச்சை உள்ளிழுத்து கைகளை தலைக்கு மேல் அஞ்சலி முத்திரையில் வைக்கவும். தலையை உயர்த்தி கைகளை பார்க்கவும். இடது கால் நேராகவும், வலது கால் மடிந்த நிலையில் இருக்கும். 10 எண்ணிக்கைக்கு பிறகு மூச்சை வெளியிட்டு கைகளை பிரித்து தோள்கள் அளவில் நீட்ட வேண்டும். மூச்சை வெளியிட்டபடி கைகளை நேரே வைத்து முட்டியை நீட்டவும்.