/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெரிய மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இந்திய கம்யூ., மாநாட்டில் தீர்மானம் பெரிய மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இந்திய கம்யூ., மாநாட்டில் தீர்மானம்
பெரிய மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இந்திய கம்யூ., மாநாட்டில் தீர்மானம்
பெரிய மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இந்திய கம்யூ., மாநாட்டில் தீர்மானம்
பெரிய மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் இந்திய கம்யூ., மாநாட்டில் தீர்மானம்
ADDED : மே 20, 2025 07:31 AM

புதுச்சேரி : பெரிய மார்க்கெட்டில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்திய கம்யூ., கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய கம்யூ., கட்சியின் பெரிய மார்க்கெட் கிளை மாநாடு ரங்கப்பிள்ளை வீதியில் நடந்தது. மாநாட்டிற்கு சிவகுருநாதன் தலைமை வகித்தார். மாநாட்டு கொடியை, சுப்ரமணி ஏற்றி வைத்தார். கிளை செயலாளர் ஜெயமூர்த்தி ஆண்டு அறிக்கை வாசித்தார். . இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், மாநில துணைச் செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நகர செயலாளர் ஜீவானந்தம், நகர துணை செயலாளர் சசிகுமார், மாநிலக் குழு உறுப்பினர் லதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில், புதிய கிளை செயலாளராக சசி(எ)பிரபாகர், துணை செயலாளராக முருகவேல், பொருளாளராக வைத்தி மற்றும் கமிட்டி உறுப்பினர்களாக சிவகுருநாதன், எம்.எஸ்.சுப்ரமணி உள்ளிட்ட 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில், பெரிய மார்க்கெட், குபேர் அங்காடியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மார்க்கெட் முழுதும் நடைபாதைகளை சீரமைக்க வேண்டும்.
மின் விளக்குகளை சரி செய்து எரிய செய்ய வேண்டும். இங்குள்ள கழிப்பிடத்தை நவீன கழிப்பிடமாக மாற்ற வேண்டும்.
பெரிய மார்க்கெட்டில் கடை வைத்துள்ளவர்களுக்கு வாடகையை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை உயர்த்தும் நிலையை மாற்றாமல் பழைய முறையையே பின்பற்ற வேண்டும், பெரிய மார்க்கெட்டில் அடிக்காசு வாடகையை, மாத வாடகையாக மாற்றி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.