/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பா.ஜ.,-என்.ஆர்.காங்., கொள்கை இல்லா கூட்டணி; முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடல் பா.ஜ.,-என்.ஆர்.காங்., கொள்கை இல்லா கூட்டணி; முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடல்
பா.ஜ.,-என்.ஆர்.காங்., கொள்கை இல்லா கூட்டணி; முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடல்
பா.ஜ.,-என்.ஆர்.காங்., கொள்கை இல்லா கூட்டணி; முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடல்
பா.ஜ.,-என்.ஆர்.காங்., கொள்கை இல்லா கூட்டணி; முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடல்
ADDED : மே 26, 2025 12:20 AM
புதுச்சேரி : பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி மாநில அந்தஸ்து கோரிக்கையில் கபட நாடகம் ஆடுகின்றது என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது பேட்டி:
பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிடி ஆயோக் கூட்டத்தை பா.ஜ., கூட்டணியில் உள்ள முதல்வர் ரங்கசாமி தொடர்ந்து, 4 ஆண்டுகளாக கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருகிறார்.
நிடி ஆயோக் கூட்டத்தில் தான் மாநில கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி, வளர்ச்சி திட்டங்களுக்கான மானியம், மாநில அந்தஸ்து உள்ளிட்டவை கேட்டுபெற முடியும்.
அந்த கூட்டத்தை தொடர்ந்து முதல்வர் புறகணித்து விட்டு, மாநில அந்தஸ்து தான் உயிர் மூச்சு என்று பேசி வருகிறார்.
சபாநாயகர் செல்வமும் 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் மாநில அந்தஸ்து கிடைக்காது என கூறியுள்ளார்.
கூட்டணி ஆட்சி இருந்தும் முதல்வரால் மாநில அந்தஸ்து பெற முடியவில்லை என்றால், எதற்காக கூட்டணியில் இருக்க வேண்டும். பா.ஜ., என்.ஆர்.காங்., கூட்டணி மாநில அந்தஸ்து கோரிக்கையில் கபட நாடகம் ஆடுகின்றனர்.
இது ஒரு கொள்கை இல்லாத கூட்டணி. புதுச்சேரி பாண்லே நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், ஊழியர்கள் வேலை செய்யவில்லை என முதல்வர் கூறுவது நிர்வாக திறமையற்றவர் என்பதையே காட்டுகிறது.
கொள்ளைபுற வழியாக தனக்கு வேண்டியவர்கள் 500 பேரை பணியில் அமர்த்த வேண்டும். அதற்காக தான் ஐஸ்கிரீம் உற்பத்தி கூடம் அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளார். புதிய ஐஸ்கிரீம் உற்பத்தி கூடம் அமைப்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.