Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புளு ஸ்டார் பள்ளி  ஆண்டு விழா

புளு ஸ்டார் பள்ளி  ஆண்டு விழா

புளு ஸ்டார் பள்ளி  ஆண்டு விழா

புளு ஸ்டார் பள்ளி  ஆண்டு விழா

ADDED : பிப் 14, 2024 03:41 AM


Google News
Latest Tamil News
வில்லியனுார் : புளு ஸ்டார் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் ஆங்கில மேல்நிலைப் பள்ளி 39வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளி தாளாளர் மெய்வழி ரவிக்குமார் தலைமை தாங்கினார். பள்ளி துணை முதல்வர் சாலை சிவசெல்வம் வரவேற்றார்.

பள்ளி முதல்வர் வரலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக கலவைக் கல்லுாரி முன்னாள் முதல்வர் நடராஜன் மற்றும் மாவட்ட பயிற்சி ஆணையர் மோகன்ராஜ் ஆகியோர் பங்கேற்று பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

பள்ளி மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பள்ளி நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மற்றும் சாரண சாரணிய மாணவர்கள் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us