/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஸ்டூடியோ பூட்டை உடைத்து கேமரா திருட்டுஸ்டூடியோ பூட்டை உடைத்து கேமரா திருட்டு
ஸ்டூடியோ பூட்டை உடைத்து கேமரா திருட்டு
ஸ்டூடியோ பூட்டை உடைத்து கேமரா திருட்டு
ஸ்டூடியோ பூட்டை உடைத்து கேமரா திருட்டு
ADDED : பிப் 01, 2024 11:32 PM
புதுச்சேரி: புதுச்சேரி, உருளையன்பேட்டையை சேர்ந்தவர் பெனோ; அதே பகுதியில் ஸ்டூடியோ வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
நேற்று காலை வந்த போது, கடை கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ரூ. 6 லட்சம் மதிப்புள்ள மூன்று கேமராக்கள் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவரது புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார், திருடு நடத்த ஸ்டூடியோவை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, கேமராக்களை திருடிச் சென்ற நபர்களை தேடி வருகின்றனர்.


