Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தவறி விழுந்த கொத்தனார் சாவு

தவறி விழுந்த கொத்தனார் சாவு

தவறி விழுந்த கொத்தனார் சாவு

தவறி விழுந்த கொத்தனார் சாவு

ADDED : ஜூன் 05, 2025 07:20 AM


Google News

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; கட்டட வேலையின் போது தவறி விழுந்த கொத்தனார் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான முட்ராம்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன், 43; கொத்தனார். இவருக்கு மஞ்சுளா என்ற மனைவியும், ஒருமகள், மகன் உள்ளனர். கடந்த பிப்ரவரி 23ம் தேதி முட்ராம்பட்டை சேர்ந்த கட்டட மேஸ்திரி வீரமணியுடன், முத்திரையர்பாளையம், கல்கி கோவில் தெருவில் உள்ள வீட்டில் கணேசன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, முதல் மாடியில் இருந்து தவறி விழுந்த கணேசன் படுகாயமடைந்தார். கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.