/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தம்பியை எச்சரிக்க அண்ணன் வெட்டி கொலை: வில்லியனுார் அருகே பயங்கரம் தம்பியை எச்சரிக்க அண்ணன் வெட்டி கொலை: வில்லியனுார் அருகே பயங்கரம்
தம்பியை எச்சரிக்க அண்ணன் வெட்டி கொலை: வில்லியனுார் அருகே பயங்கரம்
தம்பியை எச்சரிக்க அண்ணன் வெட்டி கொலை: வில்லியனுார் அருகே பயங்கரம்
தம்பியை எச்சரிக்க அண்ணன் வெட்டி கொலை: வில்லியனுார் அருகே பயங்கரம்
ADDED : செப் 18, 2025 03:06 AM

வில்லியனுார்: வில்லியனுார் அருகே கொலை வழக்கில் தம்பி தலைமறைவாகியுள்ள நிலை யில், அண்ணனை வெட்டிக்கொன்ற கும்பபலை போலீசார் தேடி வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த உறுவையாறு பேட் பகுதியை சேர்ந்தவர் அங்காளன் மகன் சவுந்தர், 30; ஒதியம்பட்டில் உள்ள ஹைடிசன் கம்பெனியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது ம னைவி சந்திரலேகா, 28; திருமணமாகி ஓராண்டு ஆகிறது.
சவுந்தர், நேற்று மாலை 6:30 மணியளவில், மாமியார் வீடான உத்திரவாகினிபேட்டில் இருந்து தட்டாஞ்சாவடி சாலையில் பைக்கில் சென்றார். சிறிது துாரம் சென்றதும், அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், சவுந்தரை வழிமறித்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது.
இதுகுறித்து தகவலறிந்த வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொ லை சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கடந்த 2024ம் ஆண்டு ஜன.,13ம் தேதி இரவு வில்லியனூர் கண்ணகி அரசு பள்ளி அருகே நடந்து சென்ற உறுவையாறுபேட் பகுதியை சேர்ந்த ரவுடி தனபாலை, நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தது. அந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கொலை செய்யப்பட்ட சவுந்தரின் தம்பி ரவுடி ஜீவா, ஞானபிரகாசம், சந்துரு உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள சவுந்தர் தம்பி ஜீவா, பெங்களூரில் தலைமறைவாக உள்ளதாக தெரிகிறது.
தனபாலின் கூட்டாளிகள் ஜீவாவை பழிக்குப்பழியாக கொலை செய்ய திட்டமிட்டு காத்திருந்த நிலையில், அவருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவரது அண்ணன் சவுந்தரை, படுகொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
அதையடுத்து, வில்லியனுார் போலீசார் வழக்குபதிந்து, சவுந்தரை கொலை செய்த கொலையாளிகளை, தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சவுந்தர் கொலை சம்பவம் உறுவையாறு பகுதி யில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.