Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சட்ட விரோத பேனரை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரிக்கலாமா?

 சட்ட விரோத பேனரை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரிக்கலாமா?

 சட்ட விரோத பேனரை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரிக்கலாமா?


ADDED : ஜூன் 10, 2026 04:41 AM

Follow on Google

ADDED : ஜூன் 10, 2026 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சட்ட விதி மீறலை, மீறி வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனருக்கு ஆதரவாக வையாபுரி மணிகண்டன் எம். எல். ஏ., பேசியது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள கே.பி.எஸ்.திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்சார ஒயர் அருகில் மிக நெருக்கமாக, விபத்து ஏற்படும் வகையில் டிஜிட்டல் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. போலீஸ், பொதுப்பணி, மின்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி கட்டப்பட்டிருந்த இந்த டிஜிட்டல் பேனர்களை அகற்றாததால், மின் துறையினர் மண்டபத்திற்கான மின் இணைப்பை துண்டித்தனர்.

மேலும் மண்டபம் ஊழியர்களும் மின்துறைக்கு ஆதரவாக ஜெனரேட்டரை இயக்காமல் நிறுத்தி வைத்தனர். திருமண விழாவிற்கு வந்த வையாபுரி மணிகண்டன் எம். எல். ஏ., தனது ஆதரவாளர் இல்ல திருமணத்தில் மின் இணைப்பை துண்டித்ததை, கண்டித்து மின்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சட்ட விரோத பேனருக்கு ஆதரவாக வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., பேசியது திருமணத்திற்கு வந்த பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சட்டவிரோத பேனருக்காக எம்.எல்.ஏ., ஒருவர் வாதிடலாமா. மக்கள் சேவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,வுக்கு இது அழகா என்று பலர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் இது போன்ற விதிமீறல் பிரச்னைகளில், எம்.எல்.ஏ., க்கள் தலையிடுவதால் தான், புதுச்சேரியில் போக்குவரத்து விதிமுறைகளை கூட பலர் மதிக்காமல் செல்கின்றனர்.

மக்களின் சேவைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் சட்ட விரோத செயல்களின் ஈடுபடுவோரை கண்டிக்காமல், ஆதரிப்பதால் தான் சின்னஞ்சிறு மாநிலமான புதுச்சேரியில் குற்றங்களை தடுக்க முடியாமல் போலீசார் திண்டாடி வருகின்றனர்.

மின்துறை அதிரடி

திருமண மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த பேனரை அகற்றினால் மட்டுமே மின் இணைப்பு வழங்க முடியும் என தட்டாஞ்சாவடி மின்துறையினர் கடுமையான அதிரடி காட்டியது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், மின் பாதைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டப்படும் பேனர்கள், கொடி, தோரணம் உள்ளிட்டவை அகற்றினால் மட்டுமே இனிமேல் நிகழ்ச்சிகளுக்கு மின்சாரம் கிடைக்கும். இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிப்புதான் என தட்டாஞ்சாவடி மின்துறையினர் அதிரடியாக தெரிவித்துள்ளனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap