/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வாய்க்கால் மேம்பாட்டு பணி பூமி பூஜையுடன் துவக்கம் வாய்க்கால் மேம்பாட்டு பணி பூமி பூஜையுடன் துவக்கம்
வாய்க்கால் மேம்பாட்டு பணி பூமி பூஜையுடன் துவக்கம்
வாய்க்கால் மேம்பாட்டு பணி பூமி பூஜையுடன் துவக்கம்
வாய்க்கால் மேம்பாட்டு பணி பூமி பூஜையுடன் துவக்கம்
ADDED : ஜூன் 16, 2025 11:53 PM

திருபுவனை: செல்லிப்பட்டு கிராமத்தில் சாலை மற்றும் வாய்க்கால் மேம்பாட்டுப் பணியை அங்காளன் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்.
திருபுவனை தொகுதி, செல்லிப்பட்டு கிராமத்தில் பொதுப்பணித்துறை மூலம் ரூ.18.46 லட்சம் செலவில் செல்வ முருகன் நகர் மற்றும் பூந்தோட்ட சாலைகள் மற்றும்'எல்' வடிவ வாய்க்கால் அமைக்கும் பணியை, அங்காளன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
பொதுப்பணித்துறை வடக்கு கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவி பொறியாளர் சீனிவாசராம், இளநிலை பொறியாளர் தேவேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.