/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் மீது கார் மோதி விபத்து: காயமடைந்த குழந்தை பலி பைக் மீது கார் மோதி விபத்து: காயமடைந்த குழந்தை பலி
பைக் மீது கார் மோதி விபத்து: காயமடைந்த குழந்தை பலி
பைக் மீது கார் மோதி விபத்து: காயமடைந்த குழந்தை பலி
பைக் மீது கார் மோதி விபத்து: காயமடைந்த குழந்தை பலி
ADDED : மே 25, 2025 04:56 AM
புதுச்சேரி : வில்லியனுார் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் மூன்று வயது பெண் குழந்தை இறந்தது.
விழுப்புரம், பனையபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 30; தனியார் கம்பெனி ஊழியர். இவர் தனது மனைவி கவுசல்யா, 27, மகள் திஷ்யா, 3; மகன் மிதுன்ராஜ், 2, ஆகியோரை பைக்கில் (டி.என்.32.ஏ.டி.7989) அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் மாலை புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு வந்தார்.
வி.மணவெளி பாலம் கீழே சென்றபோது, கோர்காடு அடுத்த தனத்துமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவர் ஓட்டி வந்த கார் (டி.என்.16சி.6707) பைக் மீது மோதியது. இதில் படு காயமடைந்த நான்கு பேரும் ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டனர். அதில் திஷ்யா சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்தார். விபத்து குறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, சரவணனை கைது செய்தனர்.