/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரூ.4.25 லட்சம் மோசடி ஒருவர் மீது வழக்கு ரூ.4.25 லட்சம் மோசடி ஒருவர் மீது வழக்கு
ரூ.4.25 லட்சம் மோசடி ஒருவர் மீது வழக்கு
ரூ.4.25 லட்சம் மோசடி ஒருவர் மீது வழக்கு
ரூ.4.25 லட்சம் மோசடி ஒருவர் மீது வழக்கு
ADDED : செப் 19, 2025 03:09 AM
அரியாங்குப்பம்: இடம் கிரயம் செய்ய 4.25 லட்சம் ரூபாய் வாங்கி, ஏமாற்றியவர் மீது, கோர்ட் உத்தரவின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தவளக்குப்பம், நல்லவாடு பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்ரமணியன், இவருக்கு சொந்தமான இடம், பூரணாங்குப்பத்தில் உள்ளது. சென்னை, பாலவாக்கத்தைச் சேர்ந்த பாரதிதாசன், 51; என்பவருக்கு, 1318 சதுரடி இடத்தை கிரயம் செய்ய, கடந்த 2011ம் ஆண்டு, பல தவணைகள் மூலம், 4.25 லட்சம் ரூபாயை, சிவசுப்ரமணியன் வாங்கியுள்ளார்.
ஆனால், இடத்தை பாரதிதாசனுக்கு கிரயம் செய்து கொடுக்காமல், சிவசுப்ரமணியன் காலதாமதப்படுத்தி வந்தார். இதுகுறித்து, புதுச்சேரி கோர்ட்டில் பாரதிதாசன் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை, விசாரித்த, நடுவர் நீதிமன்ற நீதிபதி, தவளக்குப்பம் போலீசாருக்கு, வழக்கை பதிவு செய்ய கடந்த 16ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அதையடுத்து, போலீசார், சிவசுப்ரமணியன் மீது, 420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.