/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு
பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு
பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு
பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிவு
ADDED : அக் 24, 2025 03:04 AM
புதுச்சேரி: வில்லியனுார் பைபாஸ் உட்பட பல இடங்களில் பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி வில்லியனுார் பைபாஸ் சாலை, பத்துக்கண்ணு சந்திப்பு சாலையின் இருபுறம், பொது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், திருமண பேனர்கள், அரசியல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.
அதையடுத்து, பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாசலை பிரிவு செயற்பொறியாளர் வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பேனர் வைத்தவர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


