/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரியாங்குப்பம் சிக்னலில் சி.சி.டி.வி., கேமரா அமைப்பு அரியாங்குப்பம் சிக்னலில் சி.சி.டி.வி., கேமரா அமைப்பு
அரியாங்குப்பம் சிக்னலில் சி.சி.டி.வி., கேமரா அமைப்பு
அரியாங்குப்பம் சிக்னலில் சி.சி.டி.வி., கேமரா அமைப்பு
அரியாங்குப்பம் சிக்னலில் சி.சி.டி.வி., கேமரா அமைப்பு
ADDED : செப் 04, 2025 05:34 AM

அரியாங்குப்பம் :அரியாங்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், அமைக்கப்பட்ட சி.சி.டி.வி., கேமராவை, எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், சிவசங்கர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
அரியாங்குப்பம் சாலையில் விபத்து மற்றும் பல்வேறு குற்றச்செயல்கள் நடப்பதை தடுக்கும் பொருட்டு, சிக்னல் அருகில் சி.சி.டி.வி., கேமரா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், அரியாங்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில், 1 லட்சம் மதிப்பில், 6 சி.சி.டி.வி., கேமராக்கள் சிக்னல் மற்றும் முக்கிய இடங்களில் நேற்று அமைக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக, எம்.எல்.ஏ.,க்கள், பாஸ்கர், சிவசங்கர் ஆகியோர் சி.சி.டி.வி., கேமராவை துவக்கி வைத்த னர்.
நிகழ்ச்சியில், போக்குவரத்து எஸ்.பி., பக்தவச்சலம், தெற்கு எஸ்.பி., செல்வம், அரியாங்குப்பம் அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், கிருமாம்பாக்கம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தன்வந்திரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.