ADDED : ஜன 28, 2024 01:42 AM
பாகூர்: சென்னை, மயிலாப்பூர், சாந்தோம் டொமினிகுப்பத்தை சேர்ந்தவர் நவீன், 30; பெயின்டர். இவர், அப்பகுதியினருடன் தனியார் பஸ்சில் வேளாங்கண்ணி சுற்றுலா சென்றுவிட்டு, 25ம் தேதி புதுச்சேரி வழியாக திரும்பினர்.
புதுச்சேரி தவளக்குப்பம் பகுதியில் சாப்பிடுவதற்காக பஸ்சை நிறுத்திய போது, நவீன் சாலையை கடந்தார், அப்போது வேகமாக வந்த 'பல்சர்' பைக், மீது மோதியது. காயமடைந்த நவீன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று இறந்தார். கிருமாம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.