Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இந்திரா சதுக்கம் பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற முதல்வர் உத்தரவு

இந்திரா சதுக்கம் பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற முதல்வர் உத்தரவு

இந்திரா சதுக்கம் பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற முதல்வர் உத்தரவு

இந்திரா சதுக்கம் பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்ற முதல்வர் உத்தரவு

ADDED : அக் 23, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: கனமழை காரணமாக இந்திரா சதுக்கம் அருகே தேங்கிய மழைநீரை பார்வையிட்ட முதல்வர் ரங்கசாமி, அதனை உடனடியாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, புதுச்சேரியில் கடந்த 2 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக இந்திரா சதுக்கம் சந்திப்பில் ஒரு அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது.

இதனால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர். சாலையில் தேங்கிய மழைநீரால் வாகனங்கள் நீந்தியபடி சென்றன.

இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட இந்திரா சதுக்கம், நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, உப்பளம், தேங்காய்திட்டு, கொம்பாக்கம், வேல்ராம்பட்டு ஏரி, வில்லியனுார், கூடப்பாக்கம், ஊசுட்டேரி, கனகன் ஏரி உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் ரங்கசாமி காரில் சென்றபடி பார்வையிட்டார்.

இந்திரா சதுக்கம் அருகே அதிக மழைநீர் தேங்கியுள்ளதை கண்ட முதல்வர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், செயற் பொறியாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம், மழைநீர் வெளியேறமால் தேங்குவதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அதற்கு, அதிகாரிகள் கனகன் ஏரி நிரம்பினால் அங்கிருந்து உபரி நீர் மோகன் நகர் வழியாக வெளியேறும். ஆனால், தற்போதைய கனமழை காரணமாக அதிகபடியான உபரிநீர், ரெட்டியார் பாளையம், முகாம்பிகை நகர் வாய்கால் வழியாக இந்திரா சதுக்கம் சந்திப்பிற்கு வருவதால் தண்ணீர் சாலைகளில் தேங்குவதாக தெரிவித்தனர்.

இந்திரா சதுக்கம் சந்திப்பில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்றி போக்குவரத்தை சரி செய்யும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us