/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு புதுச்சேரியில் குடிமகன்கள் 'ஷாக்' மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு புதுச்சேரியில் குடிமகன்கள் 'ஷாக்'
மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு புதுச்சேரியில் குடிமகன்கள் 'ஷாக்'
மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு புதுச்சேரியில் குடிமகன்கள் 'ஷாக்'
மதுபானங்கள் விலை அதிரடி உயர்வு புதுச்சேரியில் குடிமகன்கள் 'ஷாக்'
மதுபான விலை உயர்வு
அதன்படி மதுபானங்கள் மீதான கலால் வரி மற்றும் கூடுதல் கலால் வரியை உயர்த்தி கலால் துறை நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்நாட்டில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபானம் 750 மி.லி., பாட்டில் ரூ.10 முதல் 47 வரையிலும், 180 மி.லி., பாட்டில் ரூ.3 முதல் 11 வரையும், பீர் வகைகள் 650 மி.லி., பாட்டில் ரூ.6 முதல் 7 வரையும், ஒயின் 750 மி.லி., ரூ.13 முதல் ரூ.26 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
குடிமகன்கள் 'ஷாக்'
தமிழகத்தை காட்டிலும் புதுச்சேரியில் மது விலை மிகவும் குறைவு. மேலும், பலவகை மதுபானங்கள் பல்வேறு பிளேவர்களில் கிடைக்கும். இதனால் தமிழக உள்ளிட்ட பிற மாநில குடிமகன்கள் தாகம் தீர்க்கவே புதுச்சேரிக்கு குவிந்து வந்தனர். இந்நிலையில் புதுச்சேரி அரசு மதுபானங்களின் விலையில் அதிரடியாக உயர்த்தியுள்ளதால், குடிமகன்கள் 'ஷாக்' ஆகி உள்ளனர்.
அரசு கஜானாவுக்கு செல்லும்
மதுபான கடை உரிமையாளர்கள் கலால் வரி, கூடுதல் கலால் வரி உள்ளிட்ட வரிகளை கட்டியே சரக்குகளை கொள்முதல் செய்கின்றனர். எனவே மதுபானங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி.,விலை மதுபான உரிமையாளர்களுக்கும், புதிதாக விதிக்கப்பட்டுள்ள கலால் வரி மற்றும் கூடுதல் கலால் வரி கலால் துறை வாயிலாக அரசு கஜானாவுக்கு சென்று விடும்.