/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை
போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை
போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை
போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனை
ADDED : மே 28, 2025 07:20 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து கலெக்டர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். சீனியர் எஸ்.பி., கலைவாணன், துணைக் கலெக்டர் குமரன், காவல்துறை, கடலோர காவல் படை, சமூக நலத்துறை, சுகாதாரத்துறை, மீன்வளத்துறை, வேளாண்துறை, கல்வித்துறை, துறைமுகத்துறை, நகராட்சி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கலெக்டர் கேட்டறித்தார். பின் கலெக்டர் பேசியதாவது: போதை பொருட்களுக்கு எதிராக செயல்களை தீவிரப்படுத்த வேண்டும். போதை பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து இளைஞர்கள் மத்தியில் வழிப்புணர்வு ஏற்படுத்துவதை அதிகப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதை இல்லாத புதுச்சேரியை உருவாக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்' என்றார்.