/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மண் அரிப்பு பகுதியை கலெக்டர் பார்வை மண் அரிப்பு பகுதியை கலெக்டர் பார்வை
மண் அரிப்பு பகுதியை கலெக்டர் பார்வை
மண் அரிப்பு பகுதியை கலெக்டர் பார்வை
மண் அரிப்பு பகுதியை கலெக்டர் பார்வை
ADDED : ஜூன் 15, 2025 11:46 PM
அரியாங்குப்பம் : சின்ன வீராம்பட்டினத்தில், கடல் சீற்றத்தால் மண் அரிப்பு ஏற்பட்ட இடங்களை கலெக்டர் குலோத்துங்கன் பார்வையிட்டார்.
அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினத்தில் ஈடன் கடற்கரை உள்ளது. கடற்கரை ஆழம் குறைவாகவும், அழகாவும் இருப்பதால், வெளிமாநிலங்களில் இருந்து குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடல் சீற்றத்தால், மண் அரிப்பு ஏற்பட்டது. அதனால், 10 மீட்டர் துாரத்திற்கு மண் அரிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை பகுதியில் இருந்த, ஆர்ச், குடில்கள், கடலில் குளிப்பவர்களை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த டவர் உள்ள இடங்கள் சேதமடைந்தன.
சேதமடைந்த இடங்களை கலெக்டர் குலோத்துங்கன் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார்.