/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்லுாரி பேராசிரியர் வழுக்கி விழுந்து சாவு கல்லுாரி பேராசிரியர் வழுக்கி விழுந்து சாவு
கல்லுாரி பேராசிரியர் வழுக்கி விழுந்து சாவு
கல்லுாரி பேராசிரியர் வழுக்கி விழுந்து சாவு
கல்லுாரி பேராசிரியர் வழுக்கி விழுந்து சாவு
ADDED : அக் 12, 2025 04:41 AM
புதுச்சேரி : குயவர்பாளையம், சுபாஷ் சந்திரபோஷ் வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரடு, 64; தனியார் மருத்துவ கல்லுாரி பேராசிரியர். இவரது மனைவி தாசாரி பாப்பா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் சென்னையில் வேலை செய்து வ ருகின்றனர்.
அவர்களை பார்க்க தாய் தாசாரி பாப்பா கடந்த 8ம் தேதி சென்னை சென்றார். பின், 10ம் தேதி மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது, ராமச்சந்திரடு கழிவறையில் மயங்கி கிடந்தார். அவரை, மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
டாக்டர் பரிசோதித்து, அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


