ADDED : ஜூன் 15, 2025 11:47 PM
வாகன ஓட்டிகள் அவதி
சாரம், பாலாஜி நகர், பள்ளி வாசல் தெரு சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சரவணன், புதுச்சேரி.
சுகாதாரசீர்கேடு
உருளையன்பேட்டை பாரதி வீதி- சின்ன வாய்க்கால் வீதியில் குப்பைகள் அகற்றப்படாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
ராதிகா, புதுச்சேரி.
விபத்து அபாயம்
வில்லியனுார் - கூடப்பாக்கம் செல்லும் சாலையில் மாடுகள் அதிக அளவில் சுற்றித்திரிவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராஜசேகர், வில்லினுார்.
கூடுதல் போலீசார் தேவை
ஆஜந்தா சிக்னல் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருதால், கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும்.
கல்யாணம், புதுச்சேரி.