/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
ADDED : செப் 24, 2025 08:44 AM

புதுச்சேரி : உருளையன்பேட்டை தொகுதியில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நகராட்சி மேரி கட்டடத்தில் நடந்த கூட்டத்திற்கு, நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன்,உதவி பொறியாளர் நமச்சிவாயம், வருவாய் அதிகாரி பிரபாகரன், சிவா இளங்கோ, இளநிலைப் பொறியாளர் குப்புசாமி மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், உருளையன்பேட்டை தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், நடந்து வரும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் நடந்து வரும் குபேர் நகர் மற்றும் உருளையன்பேட்டை பகுதியில் அங்கன்வாடி கட்டடம் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.