Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து தொடர் முழக்க போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து தொடர் முழக்க போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து தொடர் முழக்க போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலை கண்டித்து தொடர் முழக்க போராட்டம்

ADDED : ஜூன் 21, 2025 12:43 AM


Google News
புதுச்சேரி: புதுச்சேரி ஜனநாயக உரிமைகள் மற்றும் மதசார்பின்மை பாதுகாப்பு மையம் சார்பில், ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து, தொடர் முழக்க போராட்டம் அண்ணா சிலை அருகே நடந்தது.

வழக்கறிஞர் ரத்தினம் தலைமை தாங்கினார். பேராசிரியர் இளங்கோ, வழக்கறிஞர் லெனின்துரை, ஏ.ஐ.யு.டி.யு.சி., சிவக்குமார், மேகராஜ், சண்முகம், சாரதி, இந்திய ஜனநாயக மாணவர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

போராட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் போர் செய்து, ஆயிரக்கணக்கான மக்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்தது.

தற்போது, அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுப்பதாக குற்றம்சாட்டி, ஈரான் மீது கடந்த ஒரு வாரமாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதில், ஈரானின் அணுசக்தி விஞ்ஞானிகள், உயர் பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர்.

எனவே, அனைத்து உலக நாடுகளும் இஸ்ரேலின் இந்த தாக்குதலை உடனே நிறுத்த வலியுறுத்தி, அமைதிக்கு வழிவகுக்க வேண்டும் உட்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us