/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரூ. 50 லட்சம் லோன் வாங்கி தருவதாக வீட்டை அபகரித்த தம்பதிக்கு வலை ரூ. 50 லட்சம் லோன் வாங்கி தருவதாக வீட்டை அபகரித்த தம்பதிக்கு வலை
ரூ. 50 லட்சம் லோன் வாங்கி தருவதாக வீட்டை அபகரித்த தம்பதிக்கு வலை
ரூ. 50 லட்சம் லோன் வாங்கி தருவதாக வீட்டை அபகரித்த தம்பதிக்கு வலை
ரூ. 50 லட்சம் லோன் வாங்கி தருவதாக வீட்டை அபகரித்த தம்பதிக்கு வலை
ADDED : செப் 14, 2025 02:39 AM
புதுச்சேரி : புதுச்சேரி, எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயசாரதி, 39. இவருக்கு சொந்தமாக வீடு,4 கடைகள் சின்ன மணிக்கூண்டு அருகே உள்ளது. அதில், ஒரு கடையை உருளையன்பேட்டை, கோவிந்த சாலையை சேர்ந்த சாகிர் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.
இந்நிலையில் விஜயசாரதிக்கு ஏற்பட்ட 50 லட்சம் கடனை அடைக்க பல இடங்களில் பணத்திற்காக முயற்சித்து வந்தார். இதையறிந்த சாகிர் தனக்கு அரசியல் தலைவர்கள் பலரை தெரியும் என்றும், தனது மனைவியி பெயரில் நான்கு வீடுகள், திருமண மண்டபம், இறால் பண்ணை உள்ளதாக கூறியுள்ளார்.
இதைநம்பிய விஜயசாரதி, சாகிரிடம் கடன் பெற்று தரும்படி கூறியுள்ளார். அப்போது, சாகிர் விஜயசாரதியிடம் உங்களுடைய சிபில் ஸ்கோர் குறைவாக உள்ளது. அதனால், உங்கள் பெயரில் லோன் வாங்க முடியாது என, தெரிவித்துள்ளார். மேலும், சாகிர் தனது மனைவி சர்பின் பானு பெயரில் லோன் பெற்று தருவதாகவும், அதற்காக உங்களுடைய வீட்டை எனது மனைவி பெயருக்கு பதிவு செய்து கொடுக்கும்படி கூறியுள்ளார். பின், கடனை அடைத்தவுடன் வீட்டை மாற்றி தருகிறேன் என, ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
அதைநம்பி, விஜயசாரதி தனது வீட்டை சாகிரின் மனைவி சர்பின் பானு பெயருக்கு மாற்றி எழுதி கொடுத்துள்ளார். ஆனால், அவர்கள் தெரிவித்தபடி, லோன் ஏதுவும் பெற்று தராமல் ஏமாற்றியுள்ளனர்.
விஜயசாரதி கொடுத்த புகா ரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.