/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இண்டியா கூட்டணியில் விரிசலா? மாஜி முதல்வர் நாராயணசாமி விளக்கம்இண்டியா கூட்டணியில் விரிசலா? மாஜி முதல்வர் நாராயணசாமி விளக்கம்
இண்டியா கூட்டணியில் விரிசலா? மாஜி முதல்வர் நாராயணசாமி விளக்கம்
இண்டியா கூட்டணியில் விரிசலா? மாஜி முதல்வர் நாராயணசாமி விளக்கம்
இண்டியா கூட்டணியில் விரிசலா? மாஜி முதல்வர் நாராயணசாமி விளக்கம்
ADDED : ஜன 28, 2024 04:29 AM
இண்டியா கூட்டணியில் எந்த விரிசலும் கிடையாது என,மாஜி முதல்வர்நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
மத்திய அரசின், திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்கிறோம் என்ற பெயரில், அதிகாரிகளை வைத்து கவர்னர் தமிழிசை, இரண்டு மாதங்களாக விழாக்களை நடத்தி விளம்பரம் தேடுகிறார். இந்த விழாக்களில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் இல்லை. கவர்னர் தலைமையில், ஓர் அரசும், முதல்வர் தலைமையில், ஓர் அரசும் புதுச்சேரியில் செயல்படுகிறது.
புதுச்சேரியில் மத்திய அரசின் திட்டங்கள் உண்மையில் செயல்படுகிறதா என, தெரியவில்லை. பிரதமர் காப்பீடு திட்ட அட்டையை வைத்து, சென்னை அப்போலோவில் மட்டுமில்லாமல்,ஜிப்மரில் கூட சிகிச்சை பெற முடியவில்லை. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், 300 வீடு கட்டப்படவில்லை.
மக்களை ஏமாற்றமத்திய அரசு திட்டங்கள் புதுச்சேரியில் செயல்படுத்தப்படுவதாக வீண் விளம்பரம்செய்கின்றனர். 10 ஆயிரம் பேருக்கு வேலை தருவோம் என்றனர். இதுவரை, 700 பேருக்கு கூட வேலை தரவில்லை. சட்டசபையில் அறிவித்த எந்த அறிவிப்பும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. லேப்டாப் வாங்கியதில், ரூ. 21 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. இதற்கான கோப்பை தலைமை செயலாளர் திருப்பி அனுப்பியும், கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுச்சேரியில், கஞ்சா, கொலை, போதைப்பொருட்கள், விற்பனை அதிகரிக்கிறது.புதுச்சேரியில் காங்., தான் நம்பர் ஒன் கட்சியாக உள்ளது. எந்த கட்சி பலமான கட்சி என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து, கட்சியின் பலத்தை தீர்மானிக்க முடியாது. கடந்த, 1980ல், 2 தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ., தான், இப்போது ஆட்சி செய்கிறது. எனவே வெற்றி தோல்வி மாறி மாறி வரும். காங், - தி.மு.க., கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை.எங்கள் கட்சி தலைமையிடம், லோக்சபா தேர்தலில், காங்., போட்டியிட வலியுறுத்தி வருகிறோம். கட்சி தலைமை என்ன சொல்கிறதோ, அதை நாங்கள் செய்கிறோம். அதேபோல, தி.மு.க., தலைமை சொல்வததை தி.மு.க., வினர் செய்கின்றனர்.ஏற்கனவே நாங்கள் சிட்டிங் எம்.பி.,யாக உள்ளோம். இண்டியா கூட்டணியில் விரிசலும், குடைச்சல் ஏதும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.