/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சைபர் கிரைம் பாதுகாப்பு பயிற்சிபுதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சைபர் கிரைம் பாதுகாப்பு பயிற்சி
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சைபர் கிரைம் பாதுகாப்பு பயிற்சி
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சைபர் கிரைம் பாதுகாப்பு பயிற்சி
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சைபர் கிரைம் பாதுகாப்பு பயிற்சி
ADDED : பிப் 25, 2024 04:10 AM

புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சைபர் கிரைம் பாதுகாப்பு குறித்த ஒருவார கால பயிற்சி முகாம் நடந்தது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் தேசிய நிறுவனம் சார்பில், தொழில்முனைவோர் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடந்த முகாமை சைபர் கிரைம் எஸ்.பி., பாஸ்கரன் துவக்கி வைத்து, கலந்துரையாடினார்.
தொடர்ந்து நடந்த சிறப்பு அமர்வுகளில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள், புதுச்சேரி பல்கலைக்கழக ஆராய்ச்சி, வளர்ச்சி பிரிவு இயக்குனர் ஜோசப்பின் செல்வின், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் தேசிய நிறுவன மூத்த அதிகாரி ஸ்வப்னா ஆகியோர் சைபர் கிரைம்களில் தற்போதைய போக்கு, தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.
நாட்டில் சைபர் கிரைம்கள் அதிகரித்துள்ள சூழ்நிலையில், சைபர் குற்றங்கள் தடுப்பில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. எனவே படித்த இளைஞர்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வதை காட்டிலும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் அளவிற்கு மாற வேண்டும். அதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் தேசிய நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது என, பேசினர்.
இன்ஜினியரிங் தொழில்நுட்ப டீன் சிவசத்யா, கம்ப்யூட்டர் சயின்ஸ் தலைவர் ஜெயக்குமார், பேராசிரியர்கள் சுஜாதா, கிருஷ்ணபிரியா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.