தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்


ADDED : நவ 15, 2024 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 04:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் விடுதியில் தங்கி, வேலை செய்து வந்த மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கும்பகோணம், திருபுரம்பயம், எட்டுகொட்டான் குடி, கீழதெருவை சேர்ந்தவர் செல்லத்துரை, கூலி தொழிலாளி. இவரது மகள் சிவபிரியா, 24. புதுச்சேரி, சாரத்தில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கி, சுத்துக்கேணியில் இயங்கி வரும் தனியார் மருந்து தயாரிப்பு கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

கடந்த 11ம் தேதி இரவு 7:30 மணிக்கு விடுதியில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அவரது தாய் வெண்ணிலா அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷன் 0413- 2272121 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us