/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காவல் துறை வருடாந்திர மாநாடு டி.ஜி.பி., ஷாலினி சிங் துவக்கி வைத்தார் காவல் துறை வருடாந்திர மாநாடு டி.ஜி.பி., ஷாலினி சிங் துவக்கி வைத்தார்
காவல் துறை வருடாந்திர மாநாடு டி.ஜி.பி., ஷாலினி சிங் துவக்கி வைத்தார்
காவல் துறை வருடாந்திர மாநாடு டி.ஜி.பி., ஷாலினி சிங் துவக்கி வைத்தார்
காவல் துறை வருடாந்திர மாநாடு டி.ஜி.பி., ஷாலினி சிங் துவக்கி வைத்தார்
ADDED : மார் 27, 2025 04:01 AM

புதுச்சேரி: வழக்குகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து அனைத்து காவலர்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என, டி.ஜி.பி., ஷாலினி சிங் பேசினார்.
புதுச்சேரி போலீஸ் துறையின், முதல் வருடாந்திர மாநாடு -2025, கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளியில் நடந்தது.
துவக்க விழாவிற்கு டி.ஜி.பி., ஷாலினி சிங் தலைமை தாங்கினார். ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா முன்னிலை வகித்தார். டி.ஐ.ஜி., சந்தியசுந்தரம் மாநாட்டை துவக்கி வைத்தார்.
இரண்டு நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில், 21 பாடங்களை உள்ளடக்கிய நான்கு அமர்வுகள் நடக்கிறது. போலீஸ் துறையில் உள்ள பல்வேறு சவால்கள், சமகால சட்ட அமலாக்க பிரச்னைகள், எதிர்கால வழிமுறைகள் குறித்த செயல் திட்டங்கள் போன்றவற்றை நோக்கமாக கொண்டு இம்மாநாடு நடக்கிறது.
சைபர் கிரைம், போதை பொருட்கள் கடத்தல், கடலோர பாதுகாப்பு, வி.ஐ.பி., பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு மேலாண்மை, போலீஸ் துறையில் ஏ.ஐ., பயன்பாடு மற்றும் புதிய குற்றவியல் சட்டங்கள் செயல்படுத்துல் போன்ற சவால்கள் குறித்து மூத்த போலீஸ் அதிகாரிகள், சட்ட துறை அதிகாரிகள், தடயவியல், என்.ஐ.சி., ஜிப்மர் ஆகியவற்றின் வல்லுனர்கள் விளக்கம் அளிக்கின்றனர். இம்மநாட்டில், சீனியர் எஸ்.பி.,க்கள், எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
டி.ஜி.பி., ஷாலினி சிங் பேசுகையில், 'புதுச்சேரி காவல் துறையில் மிக திறமையான மற்றும் புத்திசாலி காவலர்கள் உள்ளனர். இந்த மாநாட்டின் மூலமாக, காவல் துறையில் ஏ.ஐ., தொழில்நுட்பம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும், மற்ற அமர்வுகளில் சட்டம், சுகாதார வல்லுனர்கள் கலந்து கொண்டு பேச உள்ளனர்.
வழக்குகளில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது குறித்து அனைத்து காவலர்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வருகின்றனர். அவர்களுக்கு புதுச்சேரி காவலர்கள், சிறந்த காவலர்கள் என உணரும் அளவுக்கு நாம் செயல்பட வேண்டும்.
அப்போது தான் புதுச்சேரி காவலர்கள் குறித்து உலகம் முழுவதும் தெரியவரும்' என்றார்.