Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தினமலர் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்ப நிகழ்ச்சி புதுச்சேரியில் அக்.2ல் இரு இடங்களில் நடக்கிறது

தினமலர் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்ப நிகழ்ச்சி புதுச்சேரியில் அக்.2ல் இரு இடங்களில் நடக்கிறது

தினமலர் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்ப நிகழ்ச்சி புதுச்சேரியில் அக்.2ல் இரு இடங்களில் நடக்கிறது

தினமலர் 'அ'னா... 'ஆ'வன்னா அரிச்சுவடி ஆரம்ப நிகழ்ச்சி புதுச்சேரியில் அக்.2ல் இரு இடங்களில் நடக்கிறது

ADDED : செப் 25, 2025 11:31 PM


Google News
புதுச்சேரி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் நடத்தும் குழந்தைகளுக்கான 'அ'னா... 'ஆ'வன்னா எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி புதுச்சேரியில் வரும் 2ம் தேதி இரு இடங்களில் நடக்கிறது.

'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் நடத்தும் 'அ'னா... 'ஆ'வன்னா.. அரிச்சுவடி ஆரம்பம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, வரும் 2ம் தேதி விஜயதசமி அன்று காலை 8:00 மணி முதல் புதுச்சேரி லாஸ்பேட்டை செல்ல பெருமாள் பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மற்றும் கோர்க்காடு, பாகூர் சாலையில் உள்ள 'தி ஸ்காலர்' சி.பி.எஸ்.இ., பள்ளியில் கோலாகலமாக நடக்கிறது.

நிகழ்ச்சியில், இரண்டரை முதல் மூன்றரை வயதிற்குட்பட்ட மழலைகளின் விரல் பிடித்து பிரபல கல்வியாளர்கள், மருத்துவர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரபலங்கள் 'அ--ஆ' எழுதி பழக்க உள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். ஆனால், முன்பதிவு அவசியம். பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 'ஸ்கூல் கிட்' இலவசமாக வழங்கப்படும்.

லாஸ்பேட்டை செல்லபெருமாள்பேட்டை விவேகானந்தா மேல் நிலைப்பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க 78714-79674 என்ற மொபைல் எண்ணிலும், கோர்க்காடு 'தி ஸ்காலர்' சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க 95973-26264 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும் நாள் அவர்களின் வாழ்நாளில் மிக முக்கிய நாள். அவர்களது ஆரம்ப நிலை கல்வியறிவு தான் வாழ்நாள் முழுவதும் அறிவாற்றலுக்கும், நற்பண்புகளுக்கும் துணை நிற்கும்.

விஜயதசமி திருநாள் கல்வியை கற்கும் வித்யாரம்பத்துக்கு உகந்த நாள். இந்நாளில் உங்கள் வீட்டு இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்க கல்வியாளர்கள், உயர் அதிகாரிகள் காத்திருக்கிறார்கள்.

கல்வி கோவிலுக்குள் அடியெடுத்து வைக்க கல்வி செல்வம் கிடக்க, செல்ல குட்டீஸ்களை அழைத்து வாங்க...

இணைந்து வழங்குவோர்

இந்நிகழ்ச்சியை லாஸ்பேட்டை செல்ல பெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மற்றும் கோர்க்காடு 'தி ஸ்காலர்' பள்ளி இணைந்து வழங்குகின்றன. கோ-ஸ்பான்சராக சத்வ லாஜிஸ்டிக்ஸ் குரூப், தங்கம் நல்லெண்ணெய் மற்றும் புதுச்சேரி காங்., பொதுச் செயலாளர் வக்கீல் மருதுபாண்டியன் ஆகியோர் கரம் கோர்த்துள்ளனர்.



புகைப்படத்துடன் சான்றிதழ்

தங்களது குழந்தைகள் எழுதும் முதல் எழுத்தின் அழகிய தருணத்தை புகைப்படம் எடுத்து, உடனடியாக புகைப்படத்துடன் கூடிய 'தினமலர்' சான்றிதழ் வழங்கப்படும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us