/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆட்சியை கலைத்துவிட்டு மக்களை சந்திக்க வாருங்கள்: ஆளும்கட்சிக்கு சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., சவால்..! வேடிக்கை பார்க்கும் கவர்னர் எதற்கு எனவும் கேள்வி ஆட்சியை கலைத்துவிட்டு மக்களை சந்திக்க வாருங்கள்: ஆளும்கட்சிக்கு சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., சவால்..! வேடிக்கை பார்க்கும் கவர்னர் எதற்கு எனவும் கேள்வி
ஆட்சியை கலைத்துவிட்டு மக்களை சந்திக்க வாருங்கள்: ஆளும்கட்சிக்கு சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., சவால்..! வேடிக்கை பார்க்கும் கவர்னர் எதற்கு எனவும் கேள்வி
ஆட்சியை கலைத்துவிட்டு மக்களை சந்திக்க வாருங்கள்: ஆளும்கட்சிக்கு சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., சவால்..! வேடிக்கை பார்க்கும் கவர்னர் எதற்கு எனவும் கேள்வி
ஆட்சியை கலைத்துவிட்டு மக்களை சந்திக்க வாருங்கள்: ஆளும்கட்சிக்கு சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., சவால்..! வேடிக்கை பார்க்கும் கவர்னர் எதற்கு எனவும் கேள்வி

தினமும் ஒரு கொலை:
புதுச்சேரி தற்போது கொலைச்சேரி ஆகிவிட்டது. தினமும் கொலைகள் நடக்கிறது. இதை உள்துறை அமைச்சர் தடுக்காதது ஏன். புதுச்சேரி சின்ன மாநிலம். கொலைகள் செய்வது யார். அவர்களை ஏன் 'என்கவுண்டர்' செய்யவில்லை, காரணம் என்ன? உள்துறை அமைச்சர் தெளிவுப்படுத்த வேண்டும். இதற்கு ஒரு முடிவு வரவேண்டும்.
அமைச்சர் பதவி வழங்காதது ஏன்?
பிரதமர், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவரை நாட்டின் ஜனாதிபதியாக ஆக்கியுள்ளார். பா.ஜ., கட்சி மக்களுக்கான கட்சி, அப்படிபட்ட கட்சியில் இருந்து கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக தவறு நடப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
கவர்னர் எதற்கு?
பெண் எம்.எல்.ஏ., தனக்கு பாலியல் தொல்லை என்கிறார். அதற்கு கவர்னர் நடவடிக்கை இல்லை. கல்வித்துறையில் 100 நாட்களுக்கு மேலாக இயக்குனரை நியமிக்கவில்லை. புதுச்சேரியில் இயக்குனரே இல்லையா... இதை எல்லாம் கேட்கதான் கவர்னர். ஆனால், அவர் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளார்.
பாப்ஸ்கோ மூடல்
ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ., நான். பிரதமர் மோடி ஆட்சி புதுச்சேரியில் அமைந்தால் வளர்ச்சி ஏற்படும் என மக்களை சந்தித்து ஓட்டு வாங்கி வெற்றி பெற்றேன். பா.ஜ., ஆட்சி அமைய உழைத்த என் மீது 15 வழக்குகள் உள்ளன. ஆனால், இன்று ரெஸ்டோ பார் கொண்டு வருவதற்கு பாப்ஸ்கோவை மூடுகிறார்கள். 16 எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரியத்தை கொடுத்து இயங்க விடுங்கள். மத்திய அரசிடம் இருந்து நிதி பெறவே பா.ஜ., ஆட்சியை கொண்டு வந்தோம்.
நிலத்தை திருப்பி கொடுங்கள்
என்னுடைய தொகுதியில் உள்ள கரசூரில் 800 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமாக உள்ளது. அது எனது தொகுதி மக்கள் அரசுக்கு கொடுத்தது. பக்கத்தில் உள்ள சிப்காட்டில் உள்ள கம்பெனிகளால் அந்த ஊரே மக்கள் வாழ தகுதியற்ற இடமாகிவிட்டது. அதனால், கரசூர் பகுதியில் சுற்றுசூழலை பாதிக்காத கம்பெனிகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். இடம் கொடுத்த உள்ளூர் மக்களுக்கு 25 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
கட்சி முக்கியமில்லை:
எனது தொகுதியில் ரெஸ்டோ பார் தேவையில்லை என தெரிவித்தும், தந்தள்ளனர். ரெஸ்டோ பாரை மூடக்கோரி கவர்னரிடம் மனு கொடுத்தேன். அதற்கு அவர் அறிக்கை கேட்டுள்ளார். கவர்னர் மாளிகை, சட்டசபை எதிரல் ரெஸ்டோ பார் திறந்தால் அனுமதிப்பீர்களா? என் தொகுதியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லுாரி மற்றும் விவசாய கல்லுாரிகளுக்கு எதிரில் ரெஸ்டோ பார் திறக்கப்பட்டுள்ளது. அதனை உடனடியாக மூட வேண்டும். அதற்கு அனுமதி கொடுத்த அதிகாரி யார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாரும் கேள்வி கேட்க வேண்டும். எனக்கு கட்சி முக்கியம் இல்லை. மக்கள் தான் முக்கியம்.
போராட்டம் ரத்து ஏன்:
அதனால் தான் தொகுதி மக்களின் பிரச்னைக்காக சட்டசபையில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டேன். கட்சியின் மேலிட பொறுப்பாளர் சுரானா, மாநில தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசினர். கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாகவும், 15 நாள் அவகாசம் கோரினர்.


