Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதல்வர் பதவியை கைப்பற்ற தி.மு.க., தீவிரம்; காங்., குறட்டை... தேர்தல் பணிகளில் விறுவிறுப்பு

முதல்வர் பதவியை கைப்பற்ற தி.மு.க., தீவிரம்; காங்., குறட்டை... தேர்தல் பணிகளில் விறுவிறுப்பு

முதல்வர் பதவியை கைப்பற்ற தி.மு.க., தீவிரம்; காங்., குறட்டை... தேர்தல் பணிகளில் விறுவிறுப்பு

முதல்வர் பதவியை கைப்பற்ற தி.மு.க., தீவிரம்; காங்., குறட்டை... தேர்தல் பணிகளில் விறுவிறுப்பு

ADDED : செப் 14, 2025 01:46 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரியில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் கட்சிகள் தேர்தல் பணிகளை துவங்கி விட்டன. தற்போது எதிர்க்கட்சி தலைவர் பதவியில் உள்ள தி.மு.க., வரும் தேர்தலில் முதல்வர் பதவியை கைப்பற்றும் நோக்கத்தில் படு தீவிரமாக தேர்தல் பணிகளை மும்முரமாக செய்கிறது.

இதற்காக, வரும் தேர்தலில் அதிக இடங்களை கூட்டணியில் கேட்டு பெற்று தி.மு.க., தலைமையின் கீழ் ஆட்சியை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.அதையொட்டி, பண பலத்துடன் வெற்றி வாய்ப்புள்ளவர்களை பல தொகுதிகளில் கட்சிப் பணிகளை செய்வதற்கு இறக்கி விட்டுள்ளது. அதே நேரத்தில் கூட்டணியில் உள்ள காங்., கட்சியோ லோக்சபா தேர்தலில் கிடைத்த வெற்றி காரணமாக மிகுந்த அசட்டையாக இருந்து வருகிறது.

இதற்கு உதாரணம், சட்டசபை தேர்தலுக்கு நல்ல நிதி வளத்துடன் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களை கண்டறிந்து, கட்சியில் இணைப்பது, மாற்றுக் கட்சியிலிருந்து வருபவர்களை அரவணைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளாமல் மவுனமாக உள்ளது. மேலும், காங்., கட்சியில் இணைந்து தேர்தலில் நிற்கலாம் என, பெரும் முயற்சி செய்து கட்சியில் இணைய வருபவர்களை சீட்டு கிடைக்கும் என்ற உறுதியுடன் வர வேண்டாம் என, கூறி அதிர்ச்சியை கொடுத்து கதவடைத்து விடுகிறது.

இதற்கு முழு உதாரணம் எம்.பி.,தேர்தலில் காங்., கிற்கு ஓட்டு கேட்ட சுயேச்சை எம்.எல்.ஏ., நேருவை தி.மு.க.,விற்கு பயந்து இதுவரை கட்சியில் சேர்க்காமல் தட்டி கழித்து வருகிறது.

இது மட்டுமின்றி, ஏம்பலம் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கந்தசாமிக்கும், அவரது சகோதரர் மகன் மோகன்தாசுக்கு இடையே காங்., சார்பில் யார் தேர்தலில் நிற்பது என பனிப்போரே நடந்து வருகிறது. அதனை இதுவரை சரி செய்யாமல் கட்சித் தலைமை அமைதி காக்கிறது. இதனால் காங்கிரசில் இணைய முடியாதவர்கள், என்.ஆர்.காங்., - பா.ஜ., - தி.மு.க. ஆகிய கட்சிகளை நாடி செல்வது காங்., தலைமைக்கு தெரியுமா?





      Our Apps Available On




      Dinamalar

      Follow us