/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சண்முகாபுரத்தில் தி.மு.க., முப்பெரும் விழா சண்முகாபுரத்தில் தி.மு.க., முப்பெரும் விழா
சண்முகாபுரத்தில் தி.மு.க., முப்பெரும் விழா
சண்முகாபுரத்தில் தி.மு.க., முப்பெரும் விழா
சண்முகாபுரத்தில் தி.மு.க., முப்பெரும் விழா
ADDED : செப் 25, 2025 11:27 PM

புதுச்சேரி: புதுச்சேரி, கதிர்காமம் தொகுதி தி.மு.க., சார்பில் கருணாநிதி சிலை திறப்பு, நுாலகம் மற்றும் தொகுதி அலுவலகம் திறப்பு ஆகிய முப்பெரும் விழா சண்முகாபுரத்தில் நடந்தது.
தொகுதி செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், துணைச் செயலாளர் தமிழ்வாணன் முன்னிலை வகித்தனர்.
தலைமை நிலைய அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநில அமைப்பாளர் சிவா ஆகியோர் கருணாநிதி சிலையை திறந்த வைத்தனர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
விழாவில், அவைத் தலைவர் சிவக்குமார், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால்கென்னடி, செந்தில்குமார், சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மூர்த்தி, நந்தா. சரவணன், துணை அமைப்பாளர்கள் குமார், தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால், கார்த்திகேயன், இளைஞர் அணி முகிலன், டாக்டர் நித்திஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.