ADDED : டிச 04, 2025 05:10 AM

புதுச்சேரி: புதுச்சேரி, சின்னையாபுரத்தை சேர்ந்தவர் முனுசாமி, மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது தாய் பெரியநாயகி, 76. வயது மூப்பின் காரணமாக நேற்று இயற்கை எய்தினார்.
இவரது கண்களை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். அதனைத் தொடர்ந்து, அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் சுகாஸ் தலைமையில் செவிலியர்கள் மஞ்சு மாதா, சுபிக்ஷா ஆகியோர் மூதாட்டி பெரியநாயகியின் கருவிழிகளை தானமாக பெற்றனர்.
கண்தானம் வழங்க உதவிய சுகாதார உதவி ஆய்வாளர் ஜெகநாதன், ஆய்வாளர் முனுசாமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளை நிர்வாக குழு உறுப்பினர் அய்யனார் நன்றி தெரிவித்தார்.


