Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆட்டோ ஓட்டுவதில் தகராறு டிரைவருக்கு வெட்டு

ஆட்டோ ஓட்டுவதில் தகராறு டிரைவருக்கு வெட்டு

ஆட்டோ ஓட்டுவதில் தகராறு டிரைவருக்கு வெட்டு


ADDED : ஜன 12, 2025 04:09 AM

Follow on Google

ADDED : ஜன 12, 2025 04:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : ஆட்டோ ஓட்டுவதில் ஏற்பட்ட பிரச்னையில், டிரைவரை கத்தியால் வெட்டிய நபர் மீது வழக்கு பதிந்தனர்.

நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் குருநாதன், 52, இவர் தவளக்குப்பம் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். அதே ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டிய இவரது உறவினர் ஒருவர், கடந்த மாதம் இறந்தார்.

அவர் ஓட்டிய ஆட்டோவை, சங்கத்தின் உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்து, மற்றொருவர் மூலம் ஆட்டோவை குருநாதன் இயக்கினார்.

அதனால், ஏற்பட்ட பிரச்னையில், அஜித் மற்றும் சிலர், குருநாதனிடம் நேற்ற முன்தினம் தகராறு செய்தனர். ஆத்திரமடைந்த, அஜித், அருகில் காய்கறி கடையில் இருந்த கத்தியால், குருநாதனை தலையில் குத்தினார். காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர் கொடுத்த புகாரின் பேரில், அஜித் மற்றும் சிலர் மீது தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap