Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இ -சிகரெட் விற்றவர் கைது

இ -சிகரெட் விற்றவர் கைது

இ -சிகரெட் விற்றவர் கைது

இ -சிகரெட் விற்றவர் கைது

இ -சிகரெட் விற்றவர் கைது

ADDED : ஜூலை 29, 2025 09:41 PM


Google News
புதுச்சேரி; இ -சிகரெட் மற்றும் குட்கா பாக்கெட் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி மிஷன் வீதியில் கடை ஒன்றில், தடை செய்யப்பட்ட இ-சிகரெட் விற்பதாக பெரியக்கடை போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் கடையில் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.

போதை பொருட்களான குட்கா பாக்கெட்கள், இ--சிகரெட் இருந்ததை போலீசார் கண்டறிந்தனர். கடை உரிமையாளர் புதுச்சேரி முல்லா வீதியை சேர்ந்த சையது பயஸ், 33, என்பவரை போலீசார் கைது செய்தனர்.