பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
ADDED : பிப் 11, 2025 06:23 AM

அ நிறம் | அளவு
திருக்கனுார்: லிங்காரெட்டிப்பாளையம் பாண்கோஸ் மேல்நிலைப் பள்ளியில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். காட்டேரிக்குப்பத்தை சேர்ந்த நிதிஷ்குமார் ஏற்பாட்டில் நடந்த விழாவில், காட்டேரிக்குப்பம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் லுார்துநாதன், ஜானகிராமன் ஆகியோர் கலந்துகொண்டு, பொது தேர்வு எழுதும் 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர்களுக்கு எழுது பொருட்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினர். தொடர்ந்து, மாணவர்களுக்கான பல்வேறு வழிகாட்டி ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில், ஹரி, புருஷோத்தமன், அய்யனார், முகமது சித்திக், சுராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


