தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரயில் மோதி முதியவர் பலி

 ரயில் மோதி முதியவர் பலி

 ரயில் மோதி முதியவர் பலி


ADDED : மார் 10, 2026 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ரயில் மோதி முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரத்தில் இருந்து நேற்று மாலை 5:15 மணிக்கு புதுச்சேரி நோக்கி வண்டி எண் - 66065; விழுப்புரம் - புதுச்சேரி மெமு பாசஞ்சர் ரயில் வந்தது. முதலியார்பேட்டை, அனிதா நகர் அருகே வந்தபோது ரயில் பாதையை கடக்க முயன்ற லாஸ்பேட்டை, சாமிபிள்ளைத்தோட்டத்தை சேர்ந்த கலியமூர்த்தி, 69; மீது ரயில் மோதியது. இதில் படுகாயமடைந்த கலியமூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதையடுத்து, ரயில் நடு வழியிலேயே நிறுத்தப்பட்டது. தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சூரஜ் தலைமையிலான ரயில்வே போலீசாரும், முதலியார்பேட்டை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கலியமூர்த்தி உடலை மீட்டு கதிர்காமர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

விபத்து காரணமாக 20 நிமிடங்கள் தாமதமாக புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு சென்றது. இதனால் புவன்கரே வழியாக முதலியார்பேட்டை நோக்கி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us