/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மருத்துவ கல்லுாரியில் இட ஒதுக்கீடு முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் கோரிக்கை மருத்துவ கல்லுாரியில் இட ஒதுக்கீடு முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் கோரிக்கை
மருத்துவ கல்லுாரியில் இட ஒதுக்கீடு முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் கோரிக்கை
மருத்துவ கல்லுாரியில் இட ஒதுக்கீடு முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் கோரிக்கை
மருத்துவ கல்லுாரியில் இட ஒதுக்கீடு முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் கோரிக்கை
ADDED : ஜூன் 19, 2025 05:09 AM
புதுச்சேரி, : முப்படை முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரத்தாய்மார்கள் நலச்சங்கம் சங்கத் தலைவர் மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரியில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த முன்னாள் ராணுவ வீரர்கள் விழாவில், பங்கேற்ற முதல்வர் ரங்கசாமியிடம் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு மருத்துவ கல்லுாரிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது.அப்போது, முதல்வர் கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக உறுதி அளித்தார். இதுவரையில் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.பலமுறை முதல்வரை சந்தித்து நினைவுப்படுத்தியும் எந்த பலனும் இல்லை.
புதுச்சேரியில் அனைத்து பிரிவு மக்களின் கோரிக்கைகளை அவ்வப்போது நிறைவேற்றி வரும் முதல்வர், முன்னாள் ராணுவ வீரர்களின் கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்ற வேண்டும். மருத்துவ கல்லுாரிகளில் முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டினை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.