Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'கட்டண பாக்கியை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்' செயற்பொறியாளர் எச்சரிக்கை

'கட்டண பாக்கியை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்' செயற்பொறியாளர் எச்சரிக்கை

'கட்டண பாக்கியை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்' செயற்பொறியாளர் எச்சரிக்கை

'கட்டண பாக்கியை செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும்' செயற்பொறியாளர் எச்சரிக்கை

ADDED : செப் 16, 2025 02:49 AM


Google News
புதுச்சேரி : மின்துறை வடக்கு கோட்டம் அலுவலகத்திற்கு உட்பட மின் நுகர்வோர் தங்களுடைய கட்டண பாக்கியை செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இதுகுறித்து செயற்பொறியாளர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மின்துறை தீவிர மின் இணைப்பு துண்டிப்பு மேற்கொள்ள இருப்பதால், கிராமம் (வடக்கு) கோட்டத்திற்கு கீழ் இயங்கும் வில்லியனுார், பூமியான்பேட், லாஸ்பேட், கோரிமேடு, அசோக் நகர், முத்திரையர்பாளையம், காலாப்பட்டு, ராமநாதபுரம், சேதராப்பட்டு, திருக்கனுார், காட்டேரிக்குப்பம் ஆகிய இயக்குதலும் மற்றும் பராமரித்தலும் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட மின் நுகர்வோர்கள், தங்களுடைய மின் கட்டண பாக்கியை உரிய நேரத்தில் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், மின் இணைப்பு துண்டித்த பிறகு, நிலுவைத்தொகை முழுதும் செலுத்திய பிறகே மீண்டும் மின் இணைப்பு வழங்கப்படும். எனவே, மின் நுகர்வோர் அனைவரும் மின்துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us