/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நர்சிங் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு நர்சிங் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
நர்சிங் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
நர்சிங் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
நர்சிங் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
ADDED : செப் 25, 2025 11:28 PM
புதுச்சேரி: நர்சிங் மாணவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, கல்லுாரி முதல்வர் உட்பட 5 பேர் மீதான விசாரணை அறிக்கையை சமர்பிக்க தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையம் 3 நாள் அவகாசம் வழங்கியுள்ளது.
புதுச்சேரி இந்திராகாந்தி அரசு செவிலியர் கல்லுாரியில் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, கல்லுாரி முதல்வர், பிரமிளா தமிழ்வாணன், 3 உதவிப் பேராசிரியர்கள், ஒரு மாணவர் என 5 பேர் மீது, தேசிய எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக, தேசிய ஆணையம் உத்தரவின்பேரில், விசாரணை நடத்திய கல்லுாரி நிர்வாகம், மாணவரை தாக்கிய சக மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், ஒரு உதவிப்பேராசிரியர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மேலும், இவ்விவகாரத்தில், கல்லுாரி முதல்வர், மூன்று உதவிப்பேராசிரியர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாணவர் என 5 பேர் மீது தேசிய ஆணையத்தில் கல்லுாரி நிர்வாகம், இறுதி நாளான நேற்று அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், கல்லுாரி நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய ஆணையத்தில் மூன்று நாள் கால அவகாசம் கோரி பெற்றுள்ளது.
இதனால், நாளை ( 27 ம் தேதி )இறுதி அறிக்கையை தேசிய ஆணையத்திடம் கல்லுாரி நிர்வாகம் சமர்ப்பிக்க உள்ளது.