ADDED : பிப் 11, 2024 02:18 AM
திருக்கனுார்: காட்டேரிக்குப்பம் அடுத்த சந்தை புதுக்குப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகையன், 63; கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடைய இவர், கடந்த 4ம் தேதி சந்தை புதுக்குப்பம் காலனியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் சிமென்ட் கட்டையில் அமர்ந்திருந்தார்.
எதிர்பாராத விதமாக கீழே விழுந்த முருகையன் தலையில் படுகாயமடைந்தார். அவரது மகன் விநாயகமூர்த்தி, முருகையனை மீட்டு ஜிப்மரில் சேர்த்தார். சிகிச்சை பலனின்றி முருகையன் நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில் காட்டேரிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.