Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மழையால் சேறும் சகதியுமான நெல் வயல்கள் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை

மழையால் சேறும் சகதியுமான நெல் வயல்கள் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை

மழையால் சேறும் சகதியுமான நெல் வயல்கள் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை

மழையால் சேறும் சகதியுமான நெல் வயல்கள் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை

ADDED : ஜன 19, 2024 10:48 PM


Google News
Latest Tamil News
வில்லியனுார் -வில்லியனுார் பகுதியில் நெல் அறுவடை இயந்திரங்கள் கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வில்லியனுாரில் உள்ள இணை வேளாண் இயக்குனர் கோட்டம்-2ல், வில்லியனுார், அரியூர், திருக்காஞ்சி, திருக்கனுார், காட்டேரிக்குப்பம், மதகடிப்படடு, தொண்டமாநத்தம், சோரப்பட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட உழவர் உதவியகங்கள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் கோட்டம்-2ல் 1,200 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டுள்ளனர். கடந்த ஆக., மாதம் சம்பா போகத்திற்கு பி.பி.டி., வெள்ளை பொன்னி, பொன்மணி உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் நடவு செய்திருந்தனர். ஜன.,யில், அறுவடைக்கு தயாராக இருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் பெய்த திடீர் கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சாய்ந்தன.

தற்போது வயல்வெளிகள் சேறும் சகதியுமாக இருப்பதால் அறுவடை செய்ய பெல்ட் மிஷின் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இருக்கும் ஓரிரு அறுவடை மிஷின்களுக்கும் மணிக்கு ரூ. 2,750 வாடகை வசூலிக்கின்றனர். ஒரு ஏக்கர் அறுவடை செய்ய நான்கு மணி நேரம் ஆகிறது. ஒரு ஏக்கர் அறுவடை செய்வதற்கு ரூ.10 ஆயிரத்திற்கு மேல் செலவாகிறது என்பதால், சில விவசாயிகள் அறுவடை செய்வதையை நிறுத்தி வைத்துள்ளனர்.

அறுவடை செய்ய கால தமாதம் ஏற்படுவதால், சாய்ந்துள்ள நெற்பயிர்களில் மணிகள் முளைக்கத் துவங்கியுள்ளதால், விவாசாயிகள் பாதித்துள்ளனர்.

விவசாயிகளின் நலன் கருதி, நெற் பயிர்களுக்கு காப்பீட்டு செய்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us