Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தந்தையை தேடி வந்தபோது சிறுமிக்கு பாலியல் சீண்டல் தந்தை, மகனுக்கு '3 ஆண்டு'

தந்தையை தேடி வந்தபோது சிறுமிக்கு பாலியல் சீண்டல் தந்தை, மகனுக்கு '3 ஆண்டு'

தந்தையை தேடி வந்தபோது சிறுமிக்கு பாலியல் சீண்டல் தந்தை, மகனுக்கு '3 ஆண்டு'


ADDED : பிப் 15, 2024 02:49 AM

Follow on Google

ADDED : பிப் 15, 2024 02:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் வெங்கடாசலம், 58, ஹோட்டல் உரிமையாளர். இவரது மகன் ரக் ஷன், 22, பொறியாளர். இவருக்கும் கோரிமேட்டை சேர்ந்த ஒருவருக்கும் தொழில் ரீதியாக முன்விரோதம் இருந்தது.

கடந்த 2020ம் ஆண்டு வெங்கடாசலம், ரக் ஷன் ஆகியோர் கோரிமேட்டில் இருந்த அந்த நபரின் வீட்டிற்கு சென்றனர். அங்கு, அவரது 15 வயது மகள், வீட்டில் படித்துக் கொண்டிருந்தார்.

அவரிடம், தந்தை குறித்து கேட்டனர். அவர் இங்கு இல்லை என கூறியதை பொருட்படுத்தாமல் தேடினர். தந்தை இல்லாததால், சிறுமியை தாக்கி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர்.

புகாரின்படி, வெங்கடாசலம், ரக் ஷன் ஆகியோரை கைது செய்த கோரிமேடு போலீசார், அவர்கள் மீது புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஷோபனா தேவி, குற்றம் சாட்டப்பட்ட வெங்கடாசலம், ரக் ஷனுக்கு தலா, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, அரசு சார்பில் 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap