ADDED : மார் 18, 2025 04:26 AM

புதுச்சேரி: வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 100 நாள் காசநோய் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் மங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மார்பக எக்ஸ்ரே இலவச பரிசோதனை முகாம் நடந்தது.
மருத்துவ அதிகாரி பாமகள் கவிதை தலைமை தாங்கினார். ஞானசவுந்தரி வரவேற்றார்.
அமைச்சர் தேனீ ஜெயக்குமார், காச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சொந்த செலவில் ஊட்டச்சத்து உணவு பெட்டகங்களை வழங்கினார். 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மார்பக எக்ஸ்ரே பரிசோதனை செய்து கொண்டனர்.
ஏற்பாடுகளை காசநோய் சுகாதார பார்வையாளர் சுதா, கிராமப்புற செவிலியர்கள் மடோனா, சுகாதார உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆஷா பணியாளர் சத்யா செய்திருந்தனர்.