Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

ADDED : ஜூன் 20, 2025 02:05 AM


Google News
புதுச்சேரி : போட்டி தேர்விற்கு ஓராண்டு உதவித் தொகையுடன் இலவச பயிற்சி வகுப்பிற்கு எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி செய்திக்குறிப்பு:

வேலை தேடும் மற்றும் அரசு போட்டி தேர்வுக்கு தயாராகும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர்களுக்கு இம்மையத்தின் மூலம் ஓராண்டிற்கு உதவித் தொகையுடன் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைபெற உள்ள இப்பயிற்சி வகுப்பில் தலைசிறந்த பயிற்சி நிறுவனத்தினர் பயிற்சி அளிக்க உள்ளனர்.

பயிற்சியில் சேர ஆர்வம் உள்ள பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்கள் வரும் 25ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் இம்மையத்தில் வழங்கப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்பில் 18 முதல் 27 வயதிற்குட்பட்டவர்கள் சேரலாம். பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சி புத்தகங்கள், எழுது பொருட்களும் வழங்கப்படும்.

மேலும், விபரங்களுக்கு எண்-5, மூன்றாவது குறுக்கு தெரு, முதல் தளம், நடேசன் நகர், புதுச்சேரி-605005 என்ற முகவரியில் அணுகலாம். அல்லது 0413-2200115, 8870073622 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us