/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 11வது சர்வதேச யோகா தின விழா கவர்னர், முதல்வர் பங்கேற்பு 11வது சர்வதேச யோகா தின விழா கவர்னர், முதல்வர் பங்கேற்பு
11வது சர்வதேச யோகா தின விழா கவர்னர், முதல்வர் பங்கேற்பு
11வது சர்வதேச யோகா தின விழா கவர்னர், முதல்வர் பங்கேற்பு
11வது சர்வதேச யோகா தின விழா கவர்னர், முதல்வர் பங்கேற்பு
ADDED : ஜூன் 22, 2025 01:25 AM

புதுச்சேரி : புதுச்சேரி அரசு சார்பில்சுற்றுலாத்துறை, பள்ளிக் கல்வித் துறை, உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வித்துறை, ஆயுஷ் இயக்குநரகம் மற்றும் மாசுக் கட்டுபாட்டுக் குழுமம் உள்ளிட்ட துறைகள் மூலம்11வது சர்வதேச யோகா தின விழா கடற்கரைச் சாலையில் நடந்தது.
கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர்.
சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்.பி., தலைமைச் செயலர் சரத் சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங், அரசு செயலர்கள் மணிகண்டன், ஜெயந்த குமார் ரே, சுந்தரேசன், பங்கஜ் குமார் ஜா, சுற்றுலாத்துறை இயக்குநர் முரளிதரன் உள்ளிட்ட தொடர்புடைய துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, கடற்கரைச் சாலையில் யோகா வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற பெருந்திரள் யோகா செயல் விளக்க நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள், யோகா பயிற்சியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
முன்னதாக, விசாகப்பட்டினத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற சர்வதேச யோகா தின விழா நிகழ்வுகள் கடற்கரைச் சாலையில் வைக்கப்பட்டிருந்த திரைகளின் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.